ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தலைப்புகள் பஞ்சம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் தலைவிரித்து ஆடுகிறது என்று பார்த்தால் டிவிக்களில் ஏற்கெனவே ஆடிக் கொண்டிருக்கிறது. பல டிவி தொடர்களின் தலைப்புகள் வெற்றிகரமாக ஓடிய தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளாக வைக்கப்பட்டு வருகின்றன. இதை யாருமே தட்டிக் கேட்டதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த சில படங்களின் பெயர்கள், குப்பையான டிவி தொடர்களுக்கும், டப்பிங் தொடர்களுக்கும் வைக்கப்பட்டு அந்தப் படங்களின் ஞாபகத்தையே கெடுத்துவிடுகின்றன.
படத்திற்கு தலைப்பு வைப்பதற்கு எப்படி ஒரு வரைமுறை இருக்கிறதோ, அதே போல டிவி தொடர்களுக்கு பெயர் வைப்பதிலும் பின்பற்றலாம். ஆனால், பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதேயில்லை. ஏற்கெனவே வெளிவந்த படங்களின் பெயரை வைத்தவர்கள் இப்போது வெளிவர உள்ள படங்களின் பெயரையும் வைத்து வர உள்ள அந்தப் படங்களின் இமேஜையும் ஒருவழி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இந்தப் பெயருடன் விஜய் டிவியில் விரைவில் ஒரு தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அந்த அளவிற்கு தலைப்பு வைப்பதற்கும் கூட கற்பனைப் பஞ்சம் வந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.