மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
டப்பிங் சீரியல்களுக்கு மதிப்பு குறைந்து வரும் நேரத்தில் நேரடி சீரியல்கள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் ஒரு சினிமாவுக்குரிய பிரமாண்டத்துடன் சீரியல் தயாராக தொடங்கி உள்ளது. வருடக்கணக்கில் இழுக்காமல் குறுகிய காலத்தில் முடிந்து விடக்கூடிய விறுவிறுப்பான சீரியல்கள் வரத் தொடங்கி விட்டது.
அந்த வரிசையில் வருகிறது அழகிய தமிழ் மகள் தொடர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 28ந் தேதி ஒளிபரப்பை தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பக்காவான ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.
ஒரு மலைக் கிராமத்தில் வாழும் பெண்ணுக்கு கபடி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே லட்சியம். அவளது லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அவள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. தமிழ் சின்னத்திரை சீரியல் வரலாற்றில் ஒரு விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் முதல் சீரியல் அழகிய தமிழ் மகள்.
இந்த சீரியிலின் புரமோ வீடியோ பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. "வீரத்தோடும், விவேகத்தோடும், அன்போடும், பண்போடும் கபடி கபடி கபடி என பாடி வருகிறாள் உங்கள் இல்லங்களை தேடி வருகிறாள் அழகிய தமிழ் மகள்" என்று அறிவித்திருக்கிறது ஜீ தமிழ் சேனல்.