பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வருகிறவர்கள் சமீராவும், அன்வரும். இருவரும் நிஜத்திலும் காதலர்கள். தற்போது இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ஹீரோயினாக நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்த தொடர் மராட்டி மொழியில் ஒளிபரப்பான ஒரு காதல் தொடரின் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்புகள் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான புரமோ பாடலை சினிமா பாடலுக்கு நிகராக படம் பிடித்திருக்கிறார்கள். இந்த தொடர் வருகிற 19ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தனுக்கும், மனசெல்லாம் காதல் நிறைந்திருக்கும் ஒரு டீச்சருக்குமான காதல் கதை இது.