ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
சமீபத்தில் திரைக்கு வந்த ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ஆலியா மானசா. அதைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் அவரோ, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் என்ட்ரியானது குறித்து அவர் கூறுகையில், ஜூலியும் நான்கு பேரும் படத்திற்கு பிறகு தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் விஜய் டிவிக்காக ராஜா ராணி தொடரில் நாயகியாக நடிக்க என்னை அழைத்தனர். அந்த சீரியலை இயக்குவது சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை சீரியல்களை இயக்கிய பிரவீண் பென்னட் என்பதால் என்னால் அந்த வாய்ப்பை நழுவ விடமுடியவில்லை. அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதினால் ராஜா ராணி தொடரில் கமிட்டாகி விட்டேன்.
இந்த தொடரில் நான் நடிக்கும் செம்பருத்தி கேரக்டர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண். அந்த வீட்டு முதலாளி என்னை தனது பெண்ணாகவே நினைக்கிறார். அப்போது அவரது மகனான ஹீரோ சிங்கப்பூரில் இருந்து என்ட்ரி ஆகிறார். என்னை அவருக்கு பிடித்து விடுகிறது, திருமணம் நடக்கிறது. ஆனால் அவருக்கு சிங்கப்பூரில் ஒரு லவ் இருந்திருக்கிறது. இந்த நிலையில் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. முதலில் அப்பாவி பெண்ணாக இருக்கும் நான் பின்னர் போல்டான பெண்ணாக மாறுகிறேன். பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் உள்ளது.
மேலும், தொடர்ந்து நான் சீரியல்கள் பண்ணுவேன் என்று சொல்ல முடியாது. லீடு ரோல்கள் வந்தால் நடிப்பேன். மற்றபடி சினிமாவிலும் நடிப்பேன். சில படங்கள் வருகின்றன. ஆனால் ஒரு ஆறு மாதம் கழித்துதான் அந்த படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என்கிறார் ஆலியா மானசா.