சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு |

தற்போது சின்னத்திரைகளில் கல்யாண பரிசு , ராஜா ராணி, பூவே பூச்சூடவா ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும என்பதுதான் எனது ஆசை. அதனால் எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன் என்கிறார் அவர்.
மேலும் ஸ்ரீதேவி கூறுகையில், நான் 2008ல் சின்னத்திரையில் நடிக்க வந்தேன். முதலில் தெலுங்கில் இரண்டு சீரியல்களில் நடித்த பிறகு, செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் தமிழுக்கு வந்தேன். பின்னர், தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தேன். பாசிட்டிவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறேன். என்றாலும், நெகடீவ் வேடங்கள்தான் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.
இப்போதுகூட கல்யாண பரிசு, ராஜாராணி தொடர்களில் நெகடீவ் ரோல்களில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த மாதிரி தொடர்களில் எனது நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதால் நெகடீவ் கதாபாத்திரங்கள் மீது எனக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டது.
மேலும், படிப்பில் எனக்கு ஆர்வம் மிகுதி என்பதால் நடித்துக்கொண்டே படித்து வரும் நான், எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன். அதுதவிர, பெட் அனிமல் துறையிலும் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு நல்ல பொழுதுபோக்காகவும் உள்ளது என்று கூறும் ஸ்ரீதேவிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இல்லையாம். சீரியலில் நடிப்பது, படிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது என்கிறார்.