மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயன், 2-வது வாரத்தில் ஆர்யா, 3-வது வாரத்தில் விஜய்சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், வருகிற சனிக்கிழமை நடிகை ரேவதி கலந்து கொள்கிறார். அந்த எபிசோடின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண்-ரேவதி ஆகிய இருவரும்தான் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ராஜ்கிரணுக்கு உடல்நிலை சரியில்லாதததால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். மேலும், வெளியில் தெரியாமல் சமூக சேவை செய்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வெளிச்சம் போட்டுகாட்டும் இந்த நிகழ்ச்சியில், அடுத்தடுத்து இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுநலம் கொண்ட சாமானியர்களை வெளிச்சத்துக் கொண்டு வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் என்னதான் திரை பிரபலங்கள் கலந்து கொண்டபோதும் சமூக சேவையாற்றும் நபர்களை முன்னிறுத்திதான் இந்த நிகழ்ச்சி நடத்துப்படுமாம். அதோடு, 13 எபிசோடு இதே பாணியில் செல்ல, அதற்கடுத்து இன்னும் புதிய கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.