எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா | ‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' | அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த 'கூலி' | அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் |
கேப்டன் டி.வியின் நட்சத்திர செய்தி வாசிப்பாளர் தீபிகா. பண்ருட்டியை சேர்ந்த தீபிகா படித்தது விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியில் கல்லூரி. அங்கு படித்தபோது விழாக்களை தொகுத்து வழங்குவதிலிருந்து கலை நிகழ்ச்சிகளில் கலக்குவது வரை துறுதுறுவென இருந்தார். அவரை விஜயகாந்துக்கு பிடித்து விடவே கேப்டன் டி.வியின் செய்தி வாசிப்பாளர் ஆனார். இப்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி கல்யாணம் தொடரில் நடிக்கிறார். இது தங்கைக்காக தியாகங்கள் பல செய்து அவளை காப்பாற்றும் அக்கா கேரக்டர் தீபிகாவுக்கு.
லட்சுமி கல்யாணம் சீரியல் முடிவானபோது அதில் அக்கா கேரக்டரில் நடிக்க பலரை பரிசீலனை செய்த விஜய் டி.வி டீமின் கண்ணில் தீபிகா செய்தி வாசிப்பது பட்டிருக்கிறது. அப்பாவியாகவும், சின்ன சோகத்துடன் காணப்படும் தீபிகாவின் முகம் பிடித்து விடவே "நடிக்க சம்மதமா" என்று கேட்டுள்ளனர். செய்தி வாசிப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு நடிக்க வந்து விட்டார் தீபிகா.
தீபிகா சீரியலில் நடிப்பது அவரது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. அவர்களை சமாதனப்படுத்தி நடிக்க வந்தார். இப்போது குடும்பம் அதை ஏற்றுக் கொண்டு தினமும் லட்சுமி கல்யாணத்தை காண டி.வி. முன் உட்காருகிறார்களாம்.