படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா? | "கரு - தியா" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா? | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் நிகழ்ச்சி ஜுனியர் சீனியர். இது கல்லூரி மாணவர்களிடையே மறைந்திருக்கும் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இதில் கல்லூரி மாணவர்கள் அணியாகவோ, அல்லது தனியாகவோ கலந்து கொள்ளலாம். கூட்டு நடிப்பு, தனி நடிப்பு எதையும் செய்யலாம். தங்கள் நடிப்பாற்றலை வெளிக்காட்ட வேண்டும். நாடகத்தனமான நடிப்பாக இல்லாமல் யதார்த்தமான நடிப்புக்கு மதிப்பெண் அதிகமாக வழங்கப்படும்.
இந்த போட்டிக்கு நடிகை மீனா, ரச்சிதா, காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்து திறமையான நடிகர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். கீர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வெற்றி பெறுகிறவர்களுக்கு கை நிறைய பரிசும், சினிமா வாய்ப்பும் காத்திருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.