மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பல திரைப்படங்களை இயக்கி விட்டு சின்னத்திரைக்கு வந்தவர் சுந்தர்.கே விஜயன். செல்வி, அலைகள் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கும் தொடர் விண்ணைத்தாண்டி வருவாயா?. சரத்குமார் புதிதாக தொடங்கி உள்ள ஐ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தொடர். தொடர் பற்றி அவர் கூறியிருப்பதாவது:
சரத்குமார் சார் தயாரிக்கும் முதல் தொடரை இயக்குவது சந்தோஷமாக உள்ளது. அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நான் இயக்கிய முந்தைய தொடர்களின் சாயல் எதுவும் இதில் இருக்காது. முந்தைய தொடர்களில் செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் இருந்தது. இந்த தொடரில் காதலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். எனக்கு தெரிந்து இசையை பின்புலகமாக கொண்டு வரும் முதல் தமிழ் தொடர் இதுதான் என்று நினைக்கிறேன்.
இசையுலகில் சாதிக்கத் துடிக்கும் ஒருவனுக்கு காதல் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதுதான் கதையின் ஒண்லைன். தயாரிப்பாளர் சரத்குமார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அதை நான் சரியாக பயன்படுத்துவேன். விஜய் டிவியல் ஏற்கெனவே காதல் தொடர்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. தற்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து இந்த தொடர் நிச்சயம் வித்தியாசப்படும். என்கிறார் சுந்தர் கே.விஜயன்.