மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
டப்பிங் சீரியல்களை காவிய நேரம் என்ற தலைப்பில் சகட்டுமேனிக்கு ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி. அடுத்து ஒரு யூத்புல்லான நேரடி தமிழ் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார். பல திரைப்படங்களையும், டி.வி. தொடர்களையும் இயக்கிய சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
ஆபீஸ், தாயுமானவன், அச்சம் தவிர் தொடர்கள் மற்றும் மாப்ளசிங்கம், ரோமியோ ஜூலியட், பூஜை திரைப்படங்களில் நடித்திருக்கும் மதுமிலா ஹீரோயினாக நடிக்கிறார். நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விக்ரம் தொடரின் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரியமானவள் தொடரில் நடித்து வரும் கிரிதரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"விண்ணைத்தாண்டி வருவாயா யூத்புல்லான ஒரு காதல் கதை, அழுதுவடியும் சீரியல்களும் பயறுமுத்தும் மாந்த்ரீக சீரியல்களும் பெருகியிருக்கும் இந்த நேரத்தில் பார்த்து, ரசிக்க, சுவைக்க தகுந்த சீரியலாக விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகி இருக்கிறது" என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.