மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார், பத்து படங்களுக்குமேல் வில்லனாக நடித்துவிட்டு அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் ஹீரோவானர். சேரன் பாண்டியன் அடையாளம் கொடுத்தது, இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அரசியலுக்கு சென்ற சரத்குமார், தி.மு.கவில் இணைந்து பாரளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்பு தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடைசியாக தலைவராக இருந்தார்.
இப்படி ஏறுமுகமாக இருந்த சரத்குமாரின் வாழ்க்கையில் சமீபகாலமா சற்று சரிவு. பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலில் தோற்றார். சட்டமன்ற தேர்தலிலும் தோற்றார். இப்போது நடிகர் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார். தற்போது ஹீரோ ஆசையை விட்டுவிட்டு குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிகர் சங்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.
இந்த நிலையில் சரத்குமார் அடுத்த அவதாரமாக சீரியல் தயாரிப்பாளராகியிருக்கிறார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அவர் முதலில் தயாரிக்கப்போகும் தொடருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்த அனுபவம் மிக்க சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார்.
இளசுகளின் காதலை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்த தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சீரியல் தயாரிப்புக்காக விஜய் டி.வியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சரத்குமார். ஒரே நேரத்தில் பல தொடர்களை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.
மனைவி ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுனமான ரேடான் நிறுவனத்திடமிருந்து தனித்த இந்த நிறுவனம் இயங்கும் என்று கூறப்படுகிறது. சரத்குமார் சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்தியவர் "நான் ரெடி நீங்க ரெடியா" என்ற அவரது வசனம் புகழ்பெற்றது. இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.