எல்லா சேலனல்களும் புராண தொடர்களை ஒளிபரப்பி வரும்போது ராஜ் டி.வி காக்க காக்க என்ற பக்தி தொடர் ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது. இது பேண்டசி கலந்த சமூக பக்தி தொடர். விநாயகர் சதுர்த்தி முதல் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
தமிழ் கடவுள் முருகன் தன் பக்தையான கார்த்திகாவுக்கு வரும் இடையூறுளிலிருந்து அவளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. கார்த்திகாவிற்கு
பல வழிகளில் துன்பம் வருகிறபோது அதை முருகன் சில மாய வேலைகள் செய்தும், சிலரை நல் வழிபடுத்தியும் திருத்துகிற மாதிரியான கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒளிபரப்பாகும் பக்தி தொடர் இது. சமூக வாழ்க்கை, மாயாஜாலம், திகில் கலந்த விறுவிறுப்பான தொடராக தயாராகி உள்ளது.