சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு | 96 வயது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய மோகன்லால் |
கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடல்வரி ஒரு படத்தின் தலைப்பில் இருந்து பச்சை குழந்தைகளின் மழலை வார்த்தை வரை ஊடுருவிவிட்டது. இப்போது இந்த நெருப்புடாவை சிரிப்புடா என்று மாற்றி விஜய் டி.வியில் புதிய காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இதில் விஜய் டி.வியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி இணைந்து நடத்துகிறார்கள். பிரபலமான திரைப்படங்களில் வரும் ஹீரோவின் ஸ்டைல்கள் பன்ஞ் டயலாக்குகள், ஆக்ஷன் காட்சிகளை நையாண்டி செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. முதல் நிகழ்ச்சியாக அவர்கள் நையாண்டி செய்வது கபாலியைத்தான்.
இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வருகிற 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.