இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் |

கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, பொறந்த வீடா புகுந்த வீடா, பொண்டாட்டி தேவை, மாமா மாப்ளே உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நளினி. தற்போது என் இனிய தோழியே, மடிப்பாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். அதோடு, அம்மா நான் கொடல என்றொரு தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி தான் நடித்துள்ள சீரியல்களில் பெரும்பாலும் செண்டிமென்ட், காமெடி வேடங்களாக நடித்திருக்கிறார் நளினி.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து விட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். சினிமாவில் கதாநாயகியாக நடித்ததால் பெரும்பாலும் காதல் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களாகத்தான் நடித்தேன். ஆனால் சீரியலுக்கு வந்த பிறகு குணசித்ர நடிகையாகி விட்டேன். அம்மா வேடம், காமெடி வேடம், வில்லி வேடம் என்று கலந்து நடித்து வருகிறேன். இதில் எனக்கு செண்டிமென்ட்டாக நடித்த வேடங்களை விட காமெடியாக நடித்த வேடங்கள்தான் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. அதனால்தான் டைரக்டர்கள் என்னை காமெடி சீரியல்களில் நடிக்க அழைக்கிறார்கள்.
அதோடு, எனக்கும், ஓவராக அழுது நடிப்பது பிடிக்காது. அதனால் சில சீரியல்களைகூட தவிர்த்திருக்கிறேன். அதேசமயம், காமெடி என்றால் குஷியாகி விடுவேன். அதிக ஈடுபாடு காட்டி நடிப்பேன். அதோடு சொர்ணாக்கா ரேஞ்சுக்கு சில அதிரடியான கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி வேடங்கள் வில்லியாக தெரிந்தாலும் அதில் காமெடியும் கலந்திருக்கும். அந்தவகையில், சமீபகாலமாக சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே காமெடி கலந்த வேடங்களில் அதிகமாக நடிப்பது எனக்கு திருப்தியாக உள்ளது என்கிறார் நளினி.




