மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
சினிமாக்காரர்கள் தான் மதுரையை குத்தகை எடுத்து அங்கேயே முகாமிட்டு படப்பிடிப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றால், சமீபகாலமாக விஜய் டிவியில் தயாராகும் சில மெகா தொடர்களும் மதுரை, தேனி போன்ற பகுதிகளில்தான் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 5-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் களத்து வீடு.
தெய்வம் தந்த வீடு தொடரின் இயக்குனர் அருள்ராஜ் இயக்கும் இந்த மெகா தொடரில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய தேனீர் விடுதி படத்தில் நாயகியாக நடித்த காயத்ரி லீடு ரோலில் நடிக்கிறார். வில்லியாக தேவிப்பிரியா நடிக்கும் இந்த தொடரின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் தேனியில்தான் நடக்கிறதாம்.
தேனி மண்வாசனைக்கதை என்பதால், இந்த தொடரில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுமே அந்த வட்டார தமிழில்தான் பேசப்போகிறார்களாம். அதனால் தேனி தமிழை நன்றாக பயிற்சி கொடுத்தே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம்.