சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா |
கடந்த 2011 நவம்பர் 7-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த தொடரின் சீசன் 1-ல் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடித்தனர். அவர்களுக்கிடையே நடிப்பில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகி அந்த தொடர் நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வந்தது. மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த தொடரில் மதுரையைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் சிலர் நடித்தனர். மேலும், அந்த தொடரில் உருகி உருகி இயல்பாக ரொமான்ஸ் செய்து நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கிடையே நிஜத்திலும் காதல் உருவானதை அடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் செந்தில் நடித்தபோதும், ஸ்ரீஜா நடிப்பை நிறுத்தி விட முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அந்த தொடரின் சீசன் 2ல் புதிய ஜோடிகளாக ரசித்ரா-கவின் களமிறங்கினர். அவர்களது ரொமான்சையும் நேயர்கள் ரசித்தபோதும், பெரிய அளவில் இல்லை. அதனால் தற்போது 950 எபிசோடுகளை கடந்து விட்ட சரவணன் மீனாட்சி தொடரை 1000 எபிசோடுடன் முடித்துக் கொள்ளப்போகிறார்களாம். அதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் இப்போது நடந்து வரும நிலையில், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே சரவணன் மீனாட்சியை விஜய் டிவியில் கண்டுகளிக்க முடியும் என்கிறார்கள்.