ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் |
இனியெல்லாம் சுகமே என்ற படத்தில் அப்பாஸூக்கு ஜோடியாக நடித்தவர்தான் தென்றல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதிராஜ். அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தனது தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வந்த அவர், மறுபடியும் காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி ஆகிய படங்கள் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் அந்த படங்களும் வெற்றியை கொடுக்கவில்லை.
அதனால்தான் சினிமா தனக்கு ராசியில்லை என்று ஒரு மாற்று முயற்சியாக 2009ல் தென்றல் சீரியலில் நடித்தார். அந்த சீரியல் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆபீஸ் சீரியலில் நடித்து வரும் ராஜி கேரக்டர் பெண்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பிடித்துக்கொடுத்தது.
இப்போது ஜீ டிவியில் வெளியாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற சீரியலிலும் நடித்து வரும் ஸ்ருதிராஜ், ரொம்ப பிசியாக இருக்கிறார். அதனால் கிட்டத்தட்ட சினிமாவை நினைத்துப்பார்க்ககூட அவருக்கு நேரம் இல்லையாம். ஆனால் இப்போது அவர் பேசப்படும் நடிகையாகி விட்டதால், சினிமாவில் இருந்து வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் செல்கிறதாம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இப்போது ஸ்ருதிராஜ் இல்லையாம். காரணம், அவர் நடிப்பது தினசரி சீரியல்களாக இருப்பதால், ஓய்வு கிடைப்பதே அரியதாக உள்ளதாம். மேலும், அவர் எங்காவது ஷாப்பிங் செல்லும்போது அங்கே அவரை பார்க்கும் பெண்கள் ஓடிவந்து கட்டித்தழுவிக்கொள்கிறார்களாம். அவரது நடிப்பை ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார்களாம். இன்னும் சில பெண்கள் எங்கள் வீட்டுக்கு ஒருநாள் அவசியம் வர வேண்டும் என்று அன்புக்கட்டளை போடுகிறார்களாம்.
இந்த அளவுக்கு இல்லத்தரசிகள் தங்களது குடும்பத்தில் ஒருவராக தன்னை நினைப்பதை சொல்லி பெருமை கொள்ளும் ஸ்ருதிராஜ், இன்னும் அழுத்தமான குடும்பக்கதைகளில் நடிப்பதிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் சொல்கிறார்.