தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமாங்கல்யம் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஷிவானி. சினிமாவுக்கு தெலுங்கு மலையாளத்திலிருந்து நடிகைகள் இறக்குதி செய்யப்படுவதைப்போல இப்போது தொலைக்காட்சிக்கும் இறக்குமதி செய்கிறார்கள். அப்படி தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஷிவானி. தெலுங்கு மற்றும் இந்தியில் 5க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ் வசனங்களை ஆங்கிலம் அல்லது தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டு அதை முதல்நாளே மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு பேசி வருகிறார். இது சிரமாமாக இருக்கிறதாம். அதனால் தமிழை தீவிரமாக கற்று வருகிறார். படப்பிடிப்பு இடைவேளையில் மற்ற சீரியல்களை லேப் டாப்பில் பார்த்து உச்சரிப்பு கற்று வருகிறார். திருமாங்கல்யத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தொடர்ந்து தமிழ் சீரியல்களிலேயே நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.