தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : 'வடக்கன்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு | யோகி பாபு நடிக்கும் 'வானவன்' | மலையாளத்தில் ரீமேக் ஆகும் 'ஆதார்' | பாயல்ராஜ் புத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் | சூரியின் மாற்றம் பிரமிக்க வைக்கிறது : விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் புகழாரம் | தனியார் தீவிற்கு ஹனிமூன் சென்ற ரகுல் ப்ரீத் சிங் | சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதி - ராம் கோபால் வர்மா சந்திப்பு | 'தேவர் மகன்' - ரீ-ரிலீஸ் செய்ய திட்டம்? | விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது |
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் சேனல் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பி.,19) பிற்பகல் 2 மணிக்கு அதர்வா, பிரியா பவானி சங்கர் நடித்த குருதி ஆட்டம் படத்தை ஒளிபரப்புகிறது. இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். ராதாரவி, வத்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகா, கண்ணா ரவி, பிரகாஷ் ராகவன், பாலஹாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மதுரையில் ஒரு மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்ப்பவர் சக்திவேல் (அதர்வா). கபடி விளையாட்டில் சிறந்து விளங்கும் இவரது அணிக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் காந்திமதியின் (ராதிகா) மகன் முத்துவிற்க்கும் (கண்ணா ரவி) இடையே கபடி விளையாட்டில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டியே பகையாக மாறி கபடி ஆட்டம் எப்படி குறுதி ஆட்டமாக மாறியது என்பதுதான் படத்தின் கதை.