Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நானும் சாதாரண மனுஷி தான்! ரசிகருக்கு யாஷிகா அட்வைஸ்

03 பிப், 2023 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Yashika-advice-to-fan

சினிமா, சின்னத்திரை, இன்ஸ்டாகிராம் என எந்த பிரேமில் வந்தாலும் கவர்ச்சிக்கு என்றே அளவெடுத்து செய்த நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கென வெறித்தனமான ஒரு பெரிய ரசிகர் படையே உள்ளது. சோஷியல் மீடியாக்களில் இவருக்காக பல பேன் பேஜ்ஜுகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'டிவோட்டீஸ் ஆப் யாஷிகா' என்கிற பக்கம் தீவிரமாக யாஷிகாவை புரொமோட் செய்து வருகிறது. அதன் ஸ்டோரிகளில் யாஷிகாவின் புகைப்படத்தின் முன் ரசிகர்கள் காலை, மாலை என பாரபட்சம் பார்க்காமல் விழுந்து வணங்கி, விளக்கு ஏற்றி பூஜை செய்யும் புகைப்படங்களை வரிசையாக பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், யாஷிகாவை கடவுளாக பாவித்து ‛காட்ஷிகா' என பெயர் வைத்து ஹாஸ்டேக்கையும் பரப்பி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் பொதுஜனங்களுக்கு 'டேய் என்னடா பண்றீங்க?' என்று கேள்விகள் எழுவதில் வியப்பில்லை. அதிலும் ஒருபதிவில், 'யாஷிகாவின் பாதத்தை வணங்குவதில் தான் எனக்கு மகிழ்ச்சி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாஷிகாவின் கவனத்திற்கு இந்த பதிவு வரவே, அவர், 'நான் சாதாரண மனுஷி தான். அன்பை பகிருங்கள். கடவுளை மட்டும் வணங்குங்கள். கடவுளே மேலானவன்' என்று அட்வைஸ் செய்துள்ளார். போகிற போக்கை பார்த்தால் குஷ்பு, நமீதா, நயன்தாராவை பீட் செய்து விரைவில் யாஷிகாவுக்கும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்கள் இந்த வெறிப்பிடித்த ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஸ்டைலிலேயே குத்தாட்டம் போட்ட சாண்டி, சில்வியா! வைரலாகும் டான்ஸ் வீடியோவிஜய் ஸ்டைலிலேயே குத்தாட்டம் போட்ட ... குடிபோதையால் நல்ல வாய்ப்பை தவறவிட்ட கோமாளி! ஓட்டேரி சிவாவை திட்டித்தீர்க்கும் ஜனங்கள் குடிபோதையால் நல்ல வாய்ப்பை தவறவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)