Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் படத்தில் இருந்தே காப்பியடிக்கப்பட்ட மகான் போஸ்டர்

22 ஆக, 2021 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Mahan-poster-copied-from-Vikram-movie

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டு அதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. பைக்கில் விக்ரம் அமர்ந்திருப்பது போலவும் அவரது தலையில் கொம்பு முளைத்திருப்பது போலவும் அவரது முதுகிற்கு பின்னால் இருந்து கைகள் பல விரிந்திருப்பது போலவும் அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.


வழக்கம்போல இது எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணவேண்டிய அவசியமே இல்லாமல், ஏற்கனவே விக்ரம் நடித்த சாமி படத்தில் இருந்தே காப்பி அடித்து இதை உருவாக்கியுள்ளார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. காரணம் சாமி படம் வெளியான சமயத்தில் பல கைகளுடன் துப்பாக்கி, கத்தி பிடித்தபடி விக்ரம் காட்சி அளிக்கும் போஸ்டர் அப்போது ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டது.


மேலும் அந்த போஸ்டர் கூட, அப்போது பிரசாந்த் நடிப்பில் தயாராகி வந்த ஜெய் படத்தின் போஸ்டரை பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்கிற சர்ச்சை வேறு அப்போது எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, விஜய், அஜித், கமல் படங்கள் மீது நம்பிக்கை; தமிழ் சினிமா இயல்பு நிலைக்கு திரும்புமா? திரைத்துறையினர் எதிர்பார்ப்புரஜினி, விஜய், அஜித், கமல் படங்கள் மீது ... சிம்பு விவகாரம்: உஷா விளக்கம் சிம்பு விவகாரம்: உஷா விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)