Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜவம்சம் சமூக பிரச்சினையை பேசும் குடும்ப படம்

25 பிப், 2021 - 01:55 IST
எழுத்தின் அளவு:
rajavamsam-is-social-messaging-film

சுந்தர்.சியின் உதவியாளர் கதிர்வேலு இயக்கி உள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், ராதாரவி, தம்பி ராமய்யா, ரேகா, உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.


படம் பற்றி கதிர்வேலு கூறியதாவது; இந்த படம் கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டது. இரண்டு எதிர் எதிர் குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைதான் படம். ஒரு குடும்பத்திற்கு விஜயகுமார் தலைவராகவும், இன்னொரு குடும்பத்திற்கு ராதாரவி தலைவராகவும் இருக்கிறார்.


சசிகுமார் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலைக்கு செல்கிற இளைஞராக நடித்திருக்கிறார். இதில் 46 நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இது குடும்ப கதைதான் என்றாலும் நாளை நடக்கப்போகிற ஒரு ஆபத்தை சுட்டிக்காட்டி அதை எப்படி தீர்க்கலாம் என்பதையும் சொல்கிற படம். நவீன தொழில் நுட்பத்தால் விவசாயம் அழிந்து வருகிறது என்பது உண்மைதான். அதே தொழில்நுட்பத்தை ஏன் விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை பற்றியும் சிந்திக்க வைக்கிற படமாக இருக்கும். என்றார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆங்கில மருத்துவ முறையை சாடும் சின்னஞ்சிறு கிளியேஆங்கில மருத்துவ முறையை சாடும் ... விளம்பரம் தந்த சினிமா வாய்ப்பு: அபிதா வெங்கட் விளம்பரம் தந்த சினிமா வாய்ப்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)