குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
2011ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் பணியை ஆஸ்கர் விருது கமிட்டி துரிதப்படுத்தி உள்ளது. இந்த விருதுகள் ஹாலிவுட் படத்திற்கானது. என்றாலும் இதில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் ஒரு விருது மற்ற படங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து இந்த பிரிவுக்கு அனுப்பும்.
இதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம், தகுதியான படங்களை பார்த்து அதிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பும். ஆஸ்கர் விருது கிடைக்கிறதோ இல்லையோ ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு அனுப்பப்படுவதே பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இந்த தேர்வு இன்று (செப்டம்பர் 18) தொடங்கி வருகிற 26ந் தேதி வரை நடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் கட்டிடத்தில் தேர்வுக்கு வரும் படங்களை குழு பார்க்கிறது. ஹீரோயின், பர்பி, சுஹானி, கேங்ஸ் ஆப் வசேபூர், பான்சிங் தோமர், பெரரி கி சவாரி ஆகிய இந்திப் படங்களும், தெலுங்கில் ஈகா படமும், மலையாளத்திலிருந்து அக்ஷ்நிந்தி நிறம் என்ற படமும் போட்டியிடுகிறது.
தமிழ் நாட்டிலிருந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9. ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு படமும் போட்டிக்குச் செல்கிறது. எந்த படம் தேர்வாகிறது என்பது 27ந் தேதி தெரிய வரும். தெலுங்கு ஈகா (நான் ஈ) படத்துக்கும். கேங்ஸ் ஆப் வதேபூர் இந்தி படத்துக்கும் அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.