போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
விஜய் தனது 38வது பிறந்த நாளை நேற்று (22.06.2012) கொண்டாடினார். வருடா வருடம் ரசிகர்களோடு பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளித்து மகிழ்வார். அதே போல் இந்த வருடமும் சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு சென்றார், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மொத்தம் 40 குழந்தைகளுக்கு அணிவிக்க இருந்தார். சரியான இட வசதி இல்லாததாலும், நெருக்கடி மிகுதியாக இருந்ததாலும் 5 குழந்தைகளுக்கு மட்டுமே மோதிரம் அணிவித்தார். இதற்கிடையே விஜய்யின் பாதுகாவலராக வந்தவர்கள் மற்றும் அங்கு இருந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப் பட்டன. பிறகு அங்கு இருந்த போலீசார் வந்ததும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது, இப்பிரச்சனை காரணமாக விழாவின் பாதியிலே விஜய் சென்று விட்டார். புனேயில் நடைபெறும் துப்பாக்கி படப் பிடிப்பில் கலந்து கொள்ள விமான நிலையம் சென்று விட்டார். மேலும் இன்றைய ரசிகர்கள் நிகழ்ச்சி மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்சிகளை அவர் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் சாலி கிராமத்தில் உள்ள அவர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு நடத்தினார்.