பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் | 'ஜனநாயகன், பராசக்தி' டிக்கெட் புக்கிங் நிலவரம் எப்படி | சின்ன படங்களுக்கு எட்டாக்கனியாகிறதா அனிருத் இசை? | இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா | பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி |

பொதுவாகவே இளம் இயக்குனர்களின் ஆதர்ச இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமவுலியும் தான். நேரம், பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பரவசத்தில் இருக்கிறார் மனிதர். 2.O சவுண்ட் மிக்சிங் பணியின் இடைவேளை நேரத்தில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான்.
இந்த சந்திப்பு குறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது, “என் சின்ன வயதில் என் தந்தை 'ஜென்டில்மேன்' படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி என்னை அழைத்து சென்றார். அப்போதிலிருந்து இப்போதுவரை ஷங்கரின் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். பிரேமம் பட வேலைகளில் இருந்ததால் 'ஐ' படத்தை மட்டும் முதல்நாள் பார்க்க முடியாமல் போனது.
எங்களைப்போன்ற வளரும் இயக்குனர்களுக்கு அவர் தான் தூண்டுதலாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறார். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவிலும், உலக அளவிலும் எடுத்துசென்ற அவர்முன் அமர்ந்து பேசிய அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் புத்துணர்வை தருகிறது” என சிலாகித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.