சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கி உள்ள படம் எழுமின். விவேக், தேவயாணி முதன்மை கதாபாதிரங்களாக நடித்திருக்கிறார்கள். “வையம் மீடியாஸ்” சார்பில் விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் சரியாக அமையும் என கருதிய படக்குழு அவரிடம் கேட்க, தனுஷ் சம்மதம் சொல்லி பாடிக் கொடுத்திருக்கிறார்.