ரோபோ சங்கர் மறைவு : அரசியல் தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கல் | ரோபோ சங்கர் மறைவு : திரையுலகினர் அஞ்சலி | ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? | நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! |
அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் ரொம்ப ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டலாக நடித்து இருக்கிறாராம். மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் பில்லா-2. டேவிட் எனும் தூத்துக்குடி இளைஞன் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க, உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இப்படத்தின் டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்றுள்ளார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. படத்தில் அஜித் நடிப்பை காட்டிலும், அவரது சண்டைக்காட்சிகள் தான் மிரட்டலாக வந்திருக்கிறதாம். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, ரயில் சண்டைக்காட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடு சண்டைக்காட்சி என்று ரொம்ப ரிஸ்க் எடுத்து தன் உயிரை பணயம் வைத்து மிரட்டலாக நடித்திருக்கிறாராம். சுருக்கமாக சொல்லப்போனால் ஹாலிவுட் பட ரேஞ்ச்சுக்கு சண்டைக் காட்சிகள் வந்திருக்கிறதாம்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனிர் கதர்பால் கூறுகையில், படத்தில் சண்டைக்காட்சிகள் ரொம்ப அற்புதமாக வியக்கத்தக்க வகையில் வந்திருக்கிறது. சண்டைக்காட்சிக்காக டைரக்டர் சக்ரி டோல்ட்டி, ஜெர்மனியில் இருந்து கலைஞர்களை வரவழைத்து படமாக்கி இருக்கிறார். மேலும் நிச்சயமாக பில்லா-2 படத்தின் சண்டைக்காட்சிகள் அனைவராலும் பேசப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே பில்லா-2-வில் அஜித், இலங்கையில் இருந்து அகதியாக வந்த இளைஞர் கேரக்டர் என்று வெளியான தகவலையும் தயாரிப்பாளர் மறுத்து இருக்கிறார்.