பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
ஆரி, ஆஸ்னா ஜவேரி நடித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். டிரான்ஸ்இண்டியா மீடியா என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் ரஜேந்திர எம்.ராஜன், புனிதா ரஜேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஐசக் என்பவர் இயக்கி உள்ளார். இது ஒரு திரையரங்கை சுற்றி நடக்கிற கதை. இந்தப் படத்துக்கு எதிராக பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தாவது:
என்னுடைய தந்தை ஒரு பெரிய நடிகர். அவர் தி.நகரில் நாகேஷ் தியேட்டரை நடத்தி வந்தார். அதே பெயரில் படம் எடுத்து வெளியிட இருக்கிறார்கள். நாகேஷ் திரையரங்கம் என்று பெயர் வைப்பதற்காக எங்கள் குடும்பத்தினரிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே அந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும். எனது தந்தையின் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரரின் தந்தை நாகேஷ் தியேட்டர் நடத்தி உள்ளார். ஆனால் எதிர்மனுதாரர் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் எடுக்கவில்லை. இது எந்த வகையிலும் மனுதாரரை பாதிக்காது என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.