கூலி முதல் மீஷா வரை இந்த வார ஓடிடி ரலீஸ்...! | பிளாஷ்பேக் : காமெடியனாக இருந்து வில்லனாக மாறிய கவுண்டமணி | பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படம் இயக்கிய பெண் இயக்குனர் | தமிழ் சினிமாவில் இன்னொரு உலக அழகி | கட்டிட பணிகளால் தேர்தல் நடத்தவில்லை: கோர்ட்டில் நடிகர் சங்கம் தகவல் | ரவி மோகன், யோகி பாபுவின் ‛ஆன் ஆர்டினரி மேன்' புரொமோ வெளியீடு | ரீ ரிலீஸ் ஆகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' | அடுத்த ஆண்டு தசராவுக்கு வெளியாகும் 'வாயுபுத்ரா': ஹனுமன் புகழ் பாடும் 3டி அனிமேஷன் படம் | நடிகனாக 21 ஆண்டு நிறைவு: அர்ஜூனை மறக்காத விஷால் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே |
கேளிக்கை வரியை திரும்ப பெறாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. ஏற்கெனவே தியேட்டர்கள் 18 மற்றும் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி கட்டி வருகிறது. இதனால் தியேட்டர் வசூலில் 38 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டியுள்ளது. மீதமுள்ள 62 சதவிகிதத்தைத்தான் தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர், விநியோகஸ்தர் பங்கிட்டு கொள்ள வேண்டும். இதனால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பாக மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக்கூட்டம் மதுரையில் நடந்தது. இந்த கூட்டத்தில் 10 சதவீதம் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கேளிக்கை வரியை வாபஸ் பெறாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி மூலம் தமிழகத்தில் மீண்டும் தியேட்டர்கள் ஸ்டிரைக் ஆரம்பிக்கப்படலாம் என தெரிகிறது. இருப்பினும் அரசு உடன் பேசி சுமூக முடிவு ஏற்பட தியேட்டர் உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.