மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
இன்றைக்கு விஜய், அஜித் படங்களின் டீசர்கள் உலகளவில் சாதனை படைத்து வருகின்றன. இதை அனைவரும் பெருமையாக பேசி வருகின்றனர். ஆனால் சத்தமின்றி, எந்த பிரபலமும் இல்லாமல் குறும்படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் பேஸ்புக்கில் "மிஸ்டர் காப்ளர்" என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தை சதீஷ் குருவப்பன் என்பவர் நடித்து, இயக்கி, தயாரித்துள்ளார். மனித நேயத்தை போற்றுவோம். அனைவருக்கும் மரியாதை கொடுப்போம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தி இந்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த குறும்படத்தை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதுடன், 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதை இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சதீஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்த குறும்படத்தை பார்க்க... : https://www.facebook.com/error404officialteam/videos/1369551296465594/
இயக்குநருடன் தொடர்பு கொள்ள : Mobile: +91 91766 82190 www.SatheshGuruvappan.com