சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பானுமதி நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படம் 1956ம் ஆண்டு வெளிவந்தது. மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். ஆனால் அதற்கு முன்பே அதாவது 1941ம் ஆண்டே இதே கதை இதே தலைப்பில் தயாரானது பலருக்கு தெரியாது. இதில் என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபாவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்தார். இவர்களுடன் எம்.ஆர்.சுவாமிநாதன், எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.பண்டரிபாய், பத்மாவதி ஆகியோர் நடித்தனர். கே.எஸ்.மணி இயக்கினார்.
என்.எஸ்.கிருஷ்ணனின் அலிபாவாவும் 40 திருடர்களும் கருப்பு, வெள்ளையில் தயாரானது. எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் கேவா கலரில் தயாரானது. எம்.ஜி.ஆர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் காமெடி ஹீரோவாக நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் படம் குறைந்த பட்ஜெட்டில் ஒரே செட்டில் படமானது. எம்.ஜி.ஆர் படம் பிரம்மாண்ட செட்டுகள் போடப்பட்டு பெரிய பட்ஜெட்டில் தயாரானது. இரண்டுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.