சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

டிரான்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன், புனிதா ராஜன் தயாரித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். இஷாக் என்பவர் இயக்கி உள்ளார். ஆரி, ஆஸ்னா ஜவேரி, லதா, சித்தாரா, காளி வெங்கட், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தடைகேட்டு நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை நாகேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். அவர் சென்னை டி.நகரில் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு தியேட்டரை கட்டி நடத்தினார். தற்போது அந்த தியேட்டரின் பெயரிலேயே நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்த பெயரை வைப்பதற்கு படத்தின் சார்பில் யாரும் எங்கள் குடும்பத்திடம் அனுமதி பெறவில்லை.
எனது தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும். எங்கள் அனுமதி இன்றி நாகேஷ் திரையரங்கம் என்று தலைப்பு வைத்ததற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.




