ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… |
ஊட்டி: பத்திரிகையாளர்களை அவதுாறாகப் பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட எட்டு பேருக்கு, ஊட்டி கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த, 2009, அக்.,2ல், நடிகை புவனேஸ்வரி, விபசார வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த செய்தி, தினமலர் நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அக்., 7ல், சென்னையில் நடந்த தென்னிந்திய நடிகர்கள் சங்க கூட்டத்தில் நடிகர்கள் பலர், பத்திரிகையாளர்களை கடுமையாகவும், மிக தரக்குறைவாகவும் விமர்சித்தனர்.
இதையடுத்து, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரிசோரியா மரிய சூசை என்பவர், ஊட்டி ஜே.எம்., கோர்ட்டில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், அருண் விஜயகுமார், விஜயகுமார், இயக்குனர் சேரன், காமெடி நடிகர் விவேக், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணைக்கு நடிகர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்நிலையில், 2012, ஜன., 3ல், நடிகர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், எங்கள் மீது தொடரப்பட்ட பொய்யான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, கோரியிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணைகளுக்குப் பின், இம்மாதம், 15ம் தேதி, நடிகர்களின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஊட்டி கோர்ட்டில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் செந்தில்குமார் ராஜவேல், கோர்ட்டில் ஆஜராக, நடிகர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.