பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
1970-களில் ரஜினி, கமல் வெற்றிகரகமான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் இணைந்து நடித்தால் படம் வெள்ளி விழா என்பது அன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் இருவரும் இணைந்து நடிப்பதை விரும்பினார்கள். அதன்படி சுப்ரியா கிரியேஷன் என்ற நிறுவனம் ரஜினி, கமலை வைத்து ஒரு பிரமாண்ட பேண்டசி படம் ஒன்றை தயாரிக்க விரும்பியது. அப்போது பிரமாண்ட மலையாளப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஐ.வி.சசியை அந்த நிறுவனம் அணுகியது.
இருவரும் இணைந்த பேண்டசி படம் என்றால் அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் படமாக இருக்க வேண்டும் இதற்கு அரேபிய கதையான அலாவுதீனும் அற்புத விளக்கும் கதைதான் சரி என்றார் சசி. அதற்கு காரணம் அப்போது இதே கதை இந்தியில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்றிருந்தது. தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். அலாவுதீனாக கமல் நடிப்பது என்று முடிவானது. ஆனால் அலாவுதீன் கதையில் அலாவூதினுக்கு நிகரான ஒரு கேரக்டர் அந்தக் கதையில் இல்லை. ரஜினியை எந்த கேரக்டரில் நடிக்க வைப்பது என்பதில் பெரிய குழப்பம் இருந்தது. இதற்காக கமருதீன் என்ற கேரக்டர் உருவாக்கப்பட்டது.
படத்தில் ரஜினி வில்லன். எப்போதும் ஆட்டம் பாட்டத்துடன் ஜாலியாக இருப்பார், இளவரசி ஜெயபாரதியை அடைய திட்டம்போடுவார். ஆரம்பத்தில் வில்லனாக வரும் ரஜினி ஒரு கட்டத்தில் கமலின் நண்பர் ஆவார். இப்படி ரஜினியின் கேரக்டரில் ஏகப்பட்ட குழப்பம் இருக்கும். ஒரு காட்சியில் செய்யாத தவறுக்காக கமல், ரஜினியை கன்னத்தில் அறைவார்.
இப்படி கமலுக்காக ரஜினியின் கேரக்டரை குறைத்தது மற்றும் குழப்பியது ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்தப் படத்தில் கமல் ரஜினியை அடிக்கும் காட்சியில் பல ஊர்களில் ரசிகர்கள் திரையை கிழித்தார்கள். தனியாக நடிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். அதன் பிறகுதான் இருவரும் தனித்தனி ஹீரோவாக வளர்ந்து விட்டோம். இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து அதனை அறிவித்தார்கள். அலாவுதீனும் அற்புத விளக்கும் தோல்வி படமாக அமைந்தது. ஒரு வேளை வெற்றிபெற்றிருந்தால் இன்னும் சில படங்களில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்திருப்பார்கள்.