அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் கமல், இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இஷா ஷர்வானி நடிக்கிறார். படத்தில் கமல்ஹாசன், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் முஜாஹிதீன் பயங்கரவாதியாக நடிக்கிறாராம். இப்படத்தின் முக்கிய காட்சிகள் ஜோர்டன் நாட்டில் படமாக்கப்பட இருப்பதால், தற்போது ஜோர்டன் சென்றிருக்கிறது விஸ்வரூபம் டீம். மெகா பட்ஜெட்டில், தமிழ், இந்தி என இரண்டு மொழியிலும் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது.