பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர் செய்யாறு ரவி, மாரடைப்பால் காலமானார். கார்த்தி நடித்த அரிச்சந்திரா, பிரபு நடித்த தர்மசீலன் படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி. அதன்பின்னர் படங்கள் இயக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற சீரியல்களை இயக்கினார். தற்போது ஜீ தமிழில் உருவாகி வரும் ‛அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற சீரியலை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் இன்று(மார்ச் 11) பிற்பகல் 12 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். ரவியின் உடல் அஞ்லிக்காக சென்னையில் அசோக் நகரில் உள்ளது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு ரவியின் மரணம் சின்னத்திரை திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.