மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
மார்கண்டேயன் சிவகுமாரின் சினிமா கேரியரில் இப்போதும் முதல் இடத்தில் இருக்கும் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் மணி தயாரித்திருந்தார். 1979ம் ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம். தேவராஜ்-மோகன் இயக்கி இருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
யதார்த்த சினிமாக்களை இன்று கொண்டாடுகிறோம். வெறும் மசாலா படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் வந்த யதார்த்த படம் இது. சுய ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வாழும் ஒரு கிராமத்துக்குள் நாகரீகம் புகுந்ததால் விளையும் சீர்கேடுகளை சொல்லும் படம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெண்கள் ரவிக்கை அணியாத ஒரு கிராமத்துக்குள் முதன் முறையாக ஒரு பட்டணத்து பெண் ரவிக்கை அணிந்து செல்வது முதல் அவளே களங்கப்பட்டு நின்று களங்கமில்லா கணவனையும் கலங்க வைத்த கதை. சிவகுமார் அப்பாவி செம்பட்டையாகவும், தீபா நாகரீக நந்தினியாகவும் வாழ்ந்திருப்பார்கள்.
சிவகுமாரின் 100 வது படம் இது. படத்தை துவக்கி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 100-வது நாள் விழாவை தலைமை தாங்கி நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி. இந்த விழாவில் தன்னை வைத்து படம் தயாரித்த 100 தயாரிப்பாளர்களையும் அழைத்து விருது கொடுத்து கவுரவித்தார் சிவகுமார். அதோடு இந்தப் படத்தின் சம்பளத்தை கொண்டு தான் சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடங்கி ஆண்டுதோறும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கத் தொடங்கினார். சிவகுமார் படங்களில் தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்ற ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.