ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் |
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை என்ற சிறு கதையை அடிப்படையாக கொண்டு ஆர்.சி.சக்தி இயக்கிய படம் சிறை. ராஜேஷ், லட்சுமி நடித்திருந்தனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனோடு வாழ்க்கை நடத்தி ஏற்காத கணவன் கட்டிய தாலியை அறுத்தெறியும் பெண்ணின் கதை. புரட்சிகரமான இந்த கதையில் பாலியல் பலாத்காரம் செய்யும் அந்தோணியாக ராஜேசும், புரட்சிகர பெண்ணாக லட்சுமியும் நடித்திருந்தனர்.
படம் முடிந்ததும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. ஒரு பெண் தாலியை அறுத்து எரிவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அந்த கிளைமாக்ஸ் காட்சியை தூக்கி விட்டு அவள் கணவனோடு செல்வது அல்லது தற்கொலை செய்வது கொள்வது போன்றோ எடுத்தால் படத்தை வாங்குகிறோம் என்று விநியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர்களும் ஆர்.சி.சக்தியிடம் சென்று நாங்கள் போட்ட பணம் திரும்பி வரவேண்டும். கிளைமாக்ஸ்சை மாற்றுங்கள் என்றனர். அதற்கு ஆர்.சி.சக்தி. அந்த கிளைமாக்ஸ்தான் படத்திற்கு உயிர் நீங்கள் வேறு இயக்குனரை வைத்து மாற்றிக் கொள்ளுங்கள் படத்திலிருந்து என் பெயரை நீக்கி விடுங்கள் என்று கூறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்கள் பலரையும் அழைத்து படத்தை பிரிவியூ ஷோவாக போட்டுக் காட்டி படத்தை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சினர். இப்படி 60 தடவை பிரிவியூ ஷோ போடப்பட்டது. ஆனாலும் யாரும் வாங்கவில்லை. வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களே தங்கள் சொந்த பொறுப்பில் வெளியிட்டனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிளைமாக்சுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.