‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் |
சுமார் 270 படங்களில் குணசித்ர நடிகராக நடித்திருப்பவர் போண்டாமணி. இலங்கைத்தமிழரான இவர், வடிவேலுவுடன் இருந்தது வரை தனி மரியாதை இருந்தது. ஆனால் அவர் ஹீரோவான பிறகு இவர் வடிவேலு குரூப் என்று என்னை தவிர்த்தனர். இந்நிலையில், இப்போது வடிவேலு மறுபடியும் காமெடியனாக பிசியாகி விட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், எனது நிஜ பெயர் கேபீஸ்வரன். அந்த பெயரில்தான் நடிக்க வந்தேன். ஆனால், நான் அதிகமாக போண்டா சாப்பிடுவதை பார்த் தவர்கள் போண்டாவை பெயருடன் சேர்த்துக்கொள்ளுமாறு சொன்னார்கள். அதையடுத்து நான் போண்டாமணியாகி விட்டேன். குறிப்பாக, வடிவேலு, விவேக், மனோபாலா, சிங்கம்புலி, கஞ்சாகருப்பு உள்ளிட்ட எல்லா காமெடியன் களுமே அவர்களுடன் காமெடி காட்சிகளில் நடிக்க என்னை அழைக்கிறார்கள். அதனால் மிகப்பெரிய அளவில் இல்லையென்றாலும் நானும் ஒரு நடிகராக சினிமாவில் பயணித்து வருகிறேன்.
மேலும், காமெடி காட்சிகளில் அதிகமாக நடித்திருந்தபோதும் சில படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடிக்கிறேன். தற்போது சிங்கம்-3, வாய்க்கா தகராறு, வீரவம்சம், ஜெயிக்கிற குதிரை, சென்னை பக்கத்துல, வெண்ணிலா கபடிக்குழு-2, காதலின் பொன் வீதியில், ஆளில்லாத ஊருல அண்ணன்தான் எம்எல்ஏ, முந்தல் மற்றும் வி.சி.குகநாதன் இயக்கும் படம் என பரவலாக நடித்துக்கொண் டிருக்கிறேன்.
இதில் அர்ஜூன் இயக்கி வரும் காதலின் பொன்வீதியில் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா அர்ஜூனுடன் படம் முழுக்க வரும் கேரக்டரில் நடிக்கிறேன். அர்ஜூன் சாருடன் மருதமலை, வேதம், வாத்தியார் என பல படங்களில் நடித்திருக்கிறேன். மருதமலை படத்தில் நடித்து வந்தபோது நான் படம் பண் ணும்போது கூப்பிடுறேன் என்று சொன்னார். அதேபோல் மறக்காமல் எனக்கு இந்த படத்தில் சான்ஸ் கொடுத்திருக்கிறார். அதுவும் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் நடிக்கிறேன். இந்த காதலின் பொன் வீதியில் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜூன், மகேஷ்பாபு மற்றும் கன்னட காமெடியன்களுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது.
மேலும், அதேபோல் வடிவேலு அண்ணன் திரும்பவும் காமெடியனாக பிசியாகிக்கொண்டிருக்கிறார். ரொம்ப சந்தோசமாக உள்ளது. என் மீது அதிக பாசம் கொண்டவர் வடிவேலு. எனக்கு நிறைய படங்களில் வாய்ப்புக்கொடுத்திருக்கிறார். அதனால் மறுபடியும் வடிவேலு அண்ணனின் காமெடி கூட்டணியில் சேர்ந்து கலக்குவேன் என்று கருதுகிறேன். வடிவேலு அண்ணனுடன் நடித்தது வரை தனி மரியாதை இருந்தது. அவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதும் இவர் வடிவேலு குரூப் என்று சிலர் என்னை ஒதுக்கினர். ஆனால் இப்போது சில புது டைரக்டர்களும் எனக்கு சான்ஸ் கொடுத்து ஆதரித்து வருகிறார்கள்.
அதோடு, சினிமாவில் நடித்துக்கொண்டே சாய் கலைக்கூடம் என்றொரு கலைக்குழுவை நடிகர் கிங்காங்குடன் இணைந்து நடித்தி வருகிறேன். தமிழகத் தில் பல ஊர்களில் நடக்கும் கோயில், கல்யாண விழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். வெளிநாடுகளிலும் நடத்துகிறோம் இப்படி சொல்லும் போண்டாமணி, சமீபத்தில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை நடத்திய லட்சுமண் ஸ்ருதி, சிறந்த காமெடியன் என்று எனக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அது மனசுக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்தது என்கிறார்.