சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

அட்டகத்தி தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து என்ற படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு உதயநிதியுடன் பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படம் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி விட்டார். ஒரே படம் மூலம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ள நிவேதா, அடுத்தபடியாக நடிப்பதற்கும் சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார்.
இதுபற்றி நிவேதா கூறுகையில், ஒருநாள் கூத்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன். அது எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதைப்பார்த்துதான் பொதுவாக என்மனசு தங்கம் படத்திற்கு புக் பண்ணினார்கள். முதல் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்த நான், இந்த படத்தில் தேனியிலுள்ள கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். சிட்டியில் வளர்ந்த எனக்கு கிராமத்து பாவாடை தாவணி அணிந்து நடிப்பது புதுமையாக இருந்தது. அந்த வேடத்தை ரசித்து நடித்தேன்.
அடுத்தபடியாக, ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன். இது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. அதனால் அடுத்தபடியாக விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர் களுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் நிவேதா பெத்துராஜை பலரும் மதுரைக்கார பெண் என்கிறார்கள். ஆனால் அவரைக் கேட்டால், என் சொந்த ஊர் கோவில்பட்டி. நான் படித்தது துபாயில் என்கிறார்.