பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் அமீர்கான் தனியிடத்தை பிடித்தவர். தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடித்து வெளிவர இருக்கும் ‛டங்கல்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அமீர்கான் ‛டங்கல்' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன் ‛டங்கல் 'படம் தமிழில் வெளியாக இருப்பதாகவும் , படத்தில் அமீர்கானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டப்பிங் செய்ய போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தமிழில் வெளியாகும் ‛டங்கல்' படத்திற்கு ரஜினி டப் செய்ய மறுத்துவிட்டார்.
‛டங்கல்' படம் இந்த மாதம் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.