பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
இந்தி மற்றும் பெங்காலி படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும், குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறவர் தினா தத்தா. சமீபத்தில் வித்யா பாலன் நடித்த பிரனீதா, ஐஸ்வர்யராய் நடித்த ஜோக்கர் பாலி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தினா நேற்று முன்தினம் மும்பையில் இருந்து இருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அப்போது பின் சீட்டில் இருந்த ராஜேஷ் என்பவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தினா கூறியிருப்பதாவது:
விமான பயணம் கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்புறம் அமர்ந்திருந்தவர் முன்பக்கம் கையை நீட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஆரம்பதில் நான் தெரியாமல் கைபட்டுவிட்டதாக நினைத்து திரும்பி பார்த்து அவரை முறைத்தேன். அவர் சாரி கேட்டார். ஆனால் அதன்பிறகும் தொடர்ந்து அவ்வாறே செய்தார். இதுகுறித்து பணிப்பெண்களிடம் புகார் செய்தேன். தவறுதலாக கை படுவது சகஜம்தான். வேண்டுமானால் சீட் மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள் என்றனர்.
நான் அந்த நபரை விமானத்தை விட்டு இறக்குங்கள் என்றேன். அதற்கு விமான பணிப்பெண்கள். நீங்கள் முறைப்படி புகார் அளித்தால்தான் அப்படிச் செய்ய முடியும் என்றார்கள். நானும் புகார் கொடுத்துவிட்டு வந்தேன். எனக்கு இந்த பிரச்சினை நடந்தபோது ஒரே ஒரு குடும்பத்தை தவிர வேறு யாரும் அதனை தடடிக் கேட்கவில்லை. விமான பணிப்பெண்கள் கூட எனக்கு உதவில்லை. என்றார். தினாவின் புகார் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.