ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 7-ஆவது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த நடிகை த்ரிஷா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் தனது தாயுடன் சென்றனார். அங்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.



த்ரிஷா மட்டும் போலீசாரின் பாதுகாப்பு அரண்களை தாண்டி ஜெயலலிதா நினைவிடத்திற்கு அருகே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகே விழுந்து வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அரசியலுக்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பு. இன்று காலை தான் சென்னை வந்தேன். சென்னையே மாறிப் போய் உள்ளது. மிகப் பெரிய இழப்பை, வெற்றிடத்தை ஜெயலலிதாவின் மறைவு ஏற்படுத்தி இருப்பது தெரிகிறது. இதில் இருந்து மீண்டு வர வெகு காலம் ஆகும் என்றார்.
2013 ம் ஆண்டு நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதாவிடம் இருந்து த்ரிஷா விருது பெற்றார். அன்று முதல் தற்போது ஜெயலலிதாவின் மிகப் பெரிய ரசிகையாக மாறி விட்டதாக த்ரிஷா பலமுறை தனது பேட்டிகளில் கூறி உள்ளார். த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தின் கவர் போட்டோவில், ஜெயலலிதா கையால் விருது பெற்ற போட்டோவை தான் 2013 ம் ஆண்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.