பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விஜயசேதுபதி சில படங்களில் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதை மனதில் கொண்டு சிவகார்த்திகேயனையும் சில டைரக்டர்கள் டபுள் ஹீரோ கதையுடன் அணுகினர். ஆனால் அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றதும் கதையைகூட கேட்க மறுத்து விட்டாராம். நான் நடிக்கிற படங்களில் நான் மட்டுமே ஹீரோவாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய அவர், இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் அது நான் வளர்ந்து வந்த நேரம். இப்போது எனக்கென ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. இந்த இடத்தை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால்தான் மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா-2 வில் நடிக்க அழைத்தபோதுகூட அதை நான் ஏற்கவில்லை என்று தனது நிலையை சொல்லி அனுப்புகிறார் சிவகார்த்திகேயன்.