ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் பிரபலமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள இப்படம் வெண்ணிலா கபடி குழு-2 என தயாராகுகிறது.
இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்பு குட்டி, லக்ஷ்மி, பாவா லக்ஷ்மணன், திருமா, விஜய் கணேஷ், பன்னீர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் செல்வ சேகரன் இயக்குகிறார். செல்வ கணேஷ் இசையமைக்கிறார். கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பூங்காவனம், ஆனந்த் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படபிடிப்பு இன்று (10.12.16) முதல் ஆரம்பமானது.