'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வெங்கட் பிரபுவை இயக்குநராக அடையாளம் காட்டிய சென்னை 28 படம், அவருக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி தந்தது. அதில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா. அந்தப்படத்திற்கு பிறகு சரோஜா, தமிழ்படம், கலகலப்பு, தில்லு முல்லு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர், இப்போது சென்னை 28_II படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் சிவாவின் நடிப்பிற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவாவுக்கு பிறந்தநாள், இந்த பிறந்தநாளை சென்னை 28_II படத்தின் வெற்றியோடு கொண்டாடி வருகிறார் மிர்ச்சி சிவா.
இதுப்பற்றி சிவாவிடம் பேசியபோது அவர் கூறியதாவது... ‛‛முதலில் என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கென்று தனி ஸ்டைல் அமைத்து நடிக்கிறேன். அடுத்தவர்களை சந்தோஷமாக வைத்து கொண்டால் நாமும் சந்தோஷமாக இருக்கலாம், எனவே முடிந்தவரை எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்'' என்றார்.