ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

வளரும் நடிகைகளுக்கு ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாகவோ அல்லது அவரது படத்தில் அவருடன் சில காட்சிகளிலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதேபோல வளரும் நடிகர்களுக்கு அஜித் ரசிகராக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதுவரை பலர் அப்படி நடித்திருக்கிறார்கள். சிம்பு ஒவ்வொரு படத்திலும் அப்படித்தான் நடிக்கிறார். இப்போது காமெடி நடிகர் காளி வெங்கட் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் அஜித் ரசிகராக நடிக்கிறார்.
படத்தில் அவர் ஆட்டோ டிரைவர் மற்றும் ஹீரோ ஜெய்யின் நண்பராக நடிக்கிறார். தினமும் ஆட்டோவை எடுக்கும்போது அஜித் படத்தை வணங்கிவிட்டுத்தான் எடுப்பார். ஆட்டோ முழுவதும் அஜித் படத்தை ஒட்டி வைத்திருப்பார். அஜித் ரசிகர்களுக்கு இலவச சவாரி கொடுப்பார். மலையுடன் மோது தலையுடன் மோதாதே என்கிற மாதிரி தினமும் பன்ஞ் டயலாக் எழுதி வைப்பார்.
சென்னை புறநகர் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது அஜித் படம் ஒட்டிய ஆட்டோக்கள், பேனர்கள், போஸ்டர்களை தயார் செய்து அஜித் பிறந்த நாளை காளி வெங்கட் கொண்டாடுவது போல காட்சியை எடுத்தார்கள். அப்போது அஜித் பட ஷூட்டிங் நடப்பதாக வதந்தி பரவ மக்கள் திரண்டு விட்டனர். பின்னர் அவர்களிடம் விஷயத்தை சொல்லி படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தியிருக்கிறார்கள்.
சேதுபதி படத்தை தயாரித்த வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் படத்தை தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இயக்குகிறார். ஜெய், பிரணிதா, நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.