2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் மாயா. அந்த படத்தில் மாயா, அப்சரா என இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்திருந்தார். அது அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. என்றாலும், அதையடுத்து தன்னை முற்றுகையிட்ட பேய் படங்களில் நடிக்க மறுத்த நயன்தாரா, நானும் ரெளடிதான், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன் என மாறுபட்ட கதைக்களங்களில் நடித்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் டோரா படத்தில் ஹாரர் கதையில் நடித்துள்ளார். இந்த படமும் பழி வாங்கும் பேய் படம்தான் என்றாலும், நயன்தாரா யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியான பேயாக நடித்துள்ளாராம். அவர் பழிவாங்குவது இதுவரையில்லாத வகையில் புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாம்.
அதோடு, இந்த படத்தில் பேயாக நடித்தபோது சில காட்சிகளில் ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்தாராம் நயன்தாரா. ஆனால் அது அப்போதைக்கு அவருக்கு திருப்தி கொடுத்த போதும் பின்னர் அதில் இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்று நினைத்தவர், மறுநாள் மீண்டும் அந்த காட்சிகளில் இன்னொரு முறை நடித்துக்கொடுத்தாராம். மேலும், தற்போது அனைத்துக் கட்ட பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட டோரா படம், பொங்கலுக்கு விஜய்யின் பைரவா உள்ளிட்ட சில படங்கள் வெளியான பிறகு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.