2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

பாலிவுட்டில், சர்ச்சை நாயகி என, பெயர் எடுத்தவர் கங்கனா ரனாவத். எப்போதும், ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, மற்றவர்களிடம் வாங்கி கட்டுவார். இல்லையெனில், இவர், மற்றவர்களை வெளுத்தெடுப்பார். சமீபத்தில், நீங்கள் நடித்த கேரக்டரில் உங்களுக்கு பிடித்தது எது என, பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். கங்கனாவோ, எனக்கு நடிப்பே பிடிக்காது. இதுவரை நான் நடித்த படங்களில், எந்த கேரக்டரையும் நேசித்ததே இல்லை என்றார். மேலும், அந்த படத்தில் நீங்கள் நன்றாக நடித்திருந்தீர்கள்; அந்த கேரக்டரை ரொம்பவே ரசித்தேன் என, யாராவது கூறினால், கடுப்பாகி விடுவேன் என்றும் கோபம் காட்டுகிறார் அவர். நடிப்பை வெறுக்கும் கங்கனா, நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.