வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் படு பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆனாலும், விளம்பர படங்களிலும் மேடம் தான், அதிகமாக நடித்து வருகிறார். குளிர்பானத்திலிருந்து, கொசு மருந்து விளம்பரம் வரை, அம்மணி ராஜ்யம் தான். அதிலும், மூன்று மொழிகளிலும், ஸ்ருதியே சொந்த குரலில் பேசி, விளம்பரங்களில் நடிப்பதால், பெரிய நிறுவனங்கள் எல்லாம், தங்கள் விளம்பரங்களில் ஸ்ருதியே நடிக்க வேண்டும் என, அடம் பிடிக்கின்றன. இதனால், பட வாய்ப்புகள் குறைந்தாலும், ஸ்ருதி கவலைப்பட தேவையில்லை; விளம்பரங்களில் அவருக்கு காசு குவிகிறது என, முணுமுணுக்கின்றனர், சக நடிகையர்.